மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 1987.10.23 ஆம் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு 36 ஆவது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.
நேற்று (23) மாலை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பிரத்தியேக செயலாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மெழுகுதிரிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.