Wednesday, February 4, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூறாவளி தொடர்பில் எச்சரிக்கை

சூறாவளி தொடர்பில் எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகி வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 14 முதல் 20 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 84 மற்றும் 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 40-45 கிலோமீற்றர்களாகவும், சில சமயங்களில் 55-65 கிலோமீற்றர்களாகவும் அதிகரிக்கலாம்.

இதன்படி மேற்படி கடற்பரப்புகள் கொந்தளிப்பானதாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படுவதுடன், பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles