Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டாலிருந்து நாடு திரும்பிய இலங்கை பெண் விமானத்தில் மரணம்

கட்டாலிருந்து நாடு திரும்பிய இலங்கை பெண் விமானத்தில் மரணம்

கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் தனது சேவையை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ என்ற 40 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அப்பெண் இன்று (23) அதிகாலை 01.17 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான ஞசு-662 இல் கட்டுநாயக்கவுக்கு வந்து கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles