மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைஅதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி தொழில் மற்றும் பொருட்கள் தொடர்பான வரிச்சலுகைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.