ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பிரஜைகளான தாயொருவரும் மகள் ஒருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுடனான போரை ஆரம்பித்த பின்னர் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிப்பது இதுவே முதல் முறை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜூடித் மற்றும் நடாலி ரனன் ஆகியோர் தெற்கு இஸ்ரேலில் உள்ள கிபுட்ஸ் நஹல் ஓஸில் ஹமாஸால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
ஹமாஸ் போராளிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரும் காஸாவை விட்டு வெளியேறி இஸ்ரேலின் நடுவில் உள்ள இராணுவ தளத்திற்கு பயணித்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.