எஹெலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (21) அதிகாலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தற்கொலையா அல்லது யாரேனும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.