கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை 15 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.