சில வைத்தியசாலைகளில் மருந்துகளை வெளியிடுவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்தாளர்கள் பற்றாக்குறையினால் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக அதன் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகளால் மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்வதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.