முச்சக்கர வண்டியில் 13 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஹமுனே, வென்னங்கரய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.
வாரியபொல – மல்வான ஏரிக்கு அருகில் முச்சக்கரவண்டியில் சிறுமியும் வயதான ஒருவரும் இருப்பதாக வாரியபொல பொலிஸாருக்கு நேற்று (19) தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் பொலிஸார் முச்சக்கரவண்டியில் இருந்த இருவரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தன்னுடன் முச்சக்கரவண்டியில் வந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சிறுமி வைத்திருந்த பையில் பாடசாலை சீருடை இருந்ததையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளதுடன், தான் கடஹபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.