Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோத மதுபானம் தயாரித்த இரு சீன பிரஜைகள் கைது

சட்டவிரோத மதுபானம் தயாரித்த இரு சீன பிரஜைகள் கைது

சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த சீன பிரஜைகள் இருவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜகிரிய, ஒபேசேகரபுர, வஜிரவம்ச மாவத்தையில் உள்ள வாடகை வீட்டில் இருந்து சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சீன பிரஜைகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சீன பிரஜைகள் இருவரும் துறைமுக நகரில் பணி ஆய்வாளர்களாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.

46 மற்றும் 41 வயதுடைய சீனப் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டில் மதுபான ஆலை ஒன்றை நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவொன்று நேற்று (19) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

சோதனையின் போது 250 லீற்றர் கோடா மற்றும் 100 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles