எரிபொருள் தட்டுப்பாடுக்கு இடமில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்தார்.
2024 ஜூன் வரை எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டெண்டர்கள் நிறைவடைந்துள்ளதாகவும், அதுவரை தடையில்லா எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் சினோபெக் நிறுவனத்திடம் எரிபொருள் விநியோகத்தை ஒப்படைப்பதன் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை சேமிக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.