நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்பித்த இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்தது.
அத்துடன், இந்த ரகசிய முடிவை சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கு அனுப்புவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனு மீதான விசாரணை நேற்று (19) இரவு நிறைவு பெற்றது.