மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் சில விதிகளுக்கு உட்பட்டு பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பேருந்துகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பேருந்துகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வீதி அனுமதிப்பத்திரம் மற்றும் பேருந்து அனுமதிப்பத்திரங்களுக்குட்பட்டு பேருந்துகளை அலங்கரிப்பது தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.