நேற்று (19) மாலை ரம்புக்கன பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இருந்து இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் 161 தோட்டாக்களுடன் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஹொரண பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் பிக்கு என பொலிஸார் தெரிவித்தனர்.
விகாராதிபதி வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய பிக்கு இரண்டு துப்பாக்கிகள் மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.