பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் மன்னா ரமேஷை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக சிவப்பு பிடியாணை பெற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன்படி, அவரை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸார் ஏற்கனவே செயல்படுத்தி உள்ளனர்.
மன்னா ரமேஷ் தற்போது டுபாயில் தலைமறைவாகி இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னா ரமேஷின் கொலை, கப்பம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றச்செயல்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆதாரங்களையும் பெற்று, குற்றப் புலனாய்வுத் துறை மூலம் சர்வதேச காவல்துறைக்கு அனுப்பும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அவிசாவளை தல்துவ நகரில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மன்னா ரமேஷின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.