மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கொத்து ரொட்டி, ஃப்ரைட் ரைஸ் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் குறிப்பிட்டுள்ளார்.
மின் கட்டண உயர்வு சிற்றுண்டிச்சாலை உணவு விலை அதிகரிப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்தும் விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார்.