Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு சிறுவர்கள் மாயம்

இரு சிறுவர்கள் மாயம்

இரண்டு பாடசாலை மாணவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இரண்டு சிறுவர்களும் நேற்று (19) பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தண்டிய, முட்டிபடிவெல பகுதியைச் சேர்ந்த கவீச மதுசங்க என்ற 15 வயது சிறுவனும், நாத்தண்டிய, சாகரகம பகுதியைச் சேர்ந்த லக்ஷான் நிமந்த என்ற 15 வயது சிறுவனும் காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் இருவரும் நாத்தண்டிய பிலகட்டுமுல்ல நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவர்களில் ஒருவரிடம் புகையிலை மற்றும் சில சுண்ணாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, பாடசாலை அதிபர் அவரை எச்சரித்துள்ளார்.

அதனால் அவர் மனமுடைந்திருந்ததாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

காணாமல் போன சிறுவர்களை கண்டுபிடிக்க மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles