உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
புனேவில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 256 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அணி சார்பில் அதிகபடியாக, லிட்டன் தாஸ் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
257 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 41.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 103 ஓட்டங்களையும், சுப்மன் கில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.