ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்தாத எஞ்சிய குடும்பங்களுக்கான கொடுப்பனவு நடவடிக்கைகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ரத்னசிறி ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் ஜுலை மாதத்துக்கான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும், 05 இலட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் பல்வேறு பிரச்சினைகளினால் ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு, 2024 ஜனவரிக்குள் காலதாமதமின்றி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.