அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைத்தவர்கள் மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.