இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ யுத்த கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (18) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.
124.8 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 170 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், அதன் பணியாளர்கள் இலங்கை கடற்படையுடன் இணைந்து பல பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டிலுள்ள சில சுற்றுலாத்தலங்களையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கப்பல் இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.