அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சென்றடைந்தார்.
அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அவர் இஸ்ரேலுக்கு தமது ஆதரவை உறுதியளித்துள்ளார்.
மேலும் காசாவில் மருத்துவமனை தாக்குதல் மற்ற குழுவால் நடத்தப்பட்டதாக தோன்றுகிறது என்று ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட அரபுத் தலைவர்களுடன் ஜனாதிபதி நடத்தவிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.