Friday, January 30, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்ற களஞ்சியசாலைக்குள் 2 ஆவது முறையாகவும் புகுந்த திருடர்கள்

நீதிமன்ற களஞ்சியசாலைக்குள் 2 ஆவது முறையாகவும் புகுந்த திருடர்கள்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் நிலக்கீழ் வழக்குக் களஞ்சியசாலையில் நேற்றிரவு (17) இரண்டாவது தடவையாக திருடர்கள் புகுந்துள்ளதாக வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலக்கீழ் களஞ்சியசாலையை திருடர்கள் கடந்த 6ஆம் திகதி உடைத்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் பிரதான பதிவாளர் வாழைத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரும் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

நேற்று (17) இந்தக் களஞ்சியசாலைக்குள் புகுந்த திருடர்கள், கதவுக்கு உள்ளேயும் வெளியேயும் போடப்பட்டிருந்த நான்கு பூட்டுகளையும் உடைத்து, கதவை திறந்துள்ளதாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலக்கீழ் பெட்டிக் கிடங்கில் பழைய வழக்குகள் தொடர்பான வழக்குப் பொருட்கள், தங்கப் பொருட்கள் அடங்கிய பல பெட்டகங்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles