Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு

நேற்று இரவு மூக்கு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதுடன், களுத்துறை ஸ்ரீ சந்தர்ஷனாராம வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தொலைபேசி அழைப்புக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வீட்டின் படுக்கைக்கு அருகில் சடலம் மீட்கப்பட்டது.

களுத்துறை பிரிவு குற்றத்தடுப்பு ஆய்வுகூட அதிகாரிகள் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles