மின்சாரக் கட்டணம் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் மின்சார சபையின் எதிர்பார்க்கப்படும் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளியை நிர்வகிப்பதற்காக இந்தக் கட்டணங்களை அதிகரிப்பது அத்தியாவசியமானது என மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை 22 வீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதால் மின்சாரச் செலவை மீளக் கணக்கிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.