ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவுடன் பீஜிங்கில் கலந்துரையாடியுள்ளார்
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு ஜனாதிபதிகளும் கலந்துரையாடியதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று பீஜிங் சென்றடைந்தார்.