பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஹீட் அஃப்ரிடியின் சகோதரி காலமானார்.
அஃப்ரிடியின் சகோதரி இன்று (17) காலை கராச்சியில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சஹீட் அஃப்ரிடி தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் தனது சகோதரியின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.
உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.