மனநோயாளிகளுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அங்கொட தேசிய மனநல நிலையம் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள மனநல சிகிச்சை பிரிவுகளில் Wafarin, Amiodarone, Amisulpride, lithium SR, Orciprenaline உள்ளிட்ட ஐந்து வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதில் வைத்தியசாலை ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோக பிரிவு தெரிவித்துள்ளது.