பத்தரமுல்லை பகுதியில் சிறப்பங்காடி ஒன்றின் முன்பாக யாசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் பலியானார்.
நேற்றிரவு குறித்த நபர் அந்த சிறப்பங்காடியில் இருந்து வெளியேறிய போது, அங்கிருந்த யாசகருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த வாக்குவாதம் காரணமாக யாசகர் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் குறித்த நபரை தாக்கி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை தேடும் பணி தலங்கம காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகிறது.