2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பெறுபேறுகள் கணினிமயமாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.