ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பிள்ளைகளை தயார்படுத்தும் போது மூன்று பிரதான பாடங்களில் திறன்களை வளர்ப்பதில் மட்டும் கவனம் செலுத்தியதன் காரணமாக சமச்சீர் திறன்களை அதிகரிப்பதற்கு தேவையான புலமையை பிள்ளைகள் தவறவிட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சமச்சீர் திறன்களை அதிகரிப்பதற்கான ஏழு அத்தியாவசிய புலமைகளை சிறுவர்கள் இழப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையிலிருந்து விடுபட, பாடசாலைப் பாடத்திட்டத்திலிருந்து விலகி கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பாதை நோக்கி நாம் உடனடியாக பயணிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரிப்பதால், உலகம் முழுவதும் வேலையின்மை அதிகரிக்கப்படும் எனவும், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போன்ற தொழில் வல்லுநர்களின் வேலைகள் கூட மிகவும் சவாலுக்கு உள்ளாகலாம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.