ஹிக்கடுவ கடலில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய பிரஜை ஒருவரை நாரிகம பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்.
நீரில் அடித்து செல்லபட்ட அவர், சுமார் 500 மீற்றர் தூரம் இழுத்துச்செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக செயல்பட்ட பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு அதிகாரிகள் அவரை பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.
39 வயதான ரஷ்ய பிரஜை ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.