Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்

6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்

நாட்டில் உள்ள 6 வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிரிபத்கொட ஆதார வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை, எஹெலியகொட ஆதார வைத்தியசாலை, பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலை மற்றும் மேலும் இரண்டு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் எக்ஸ்ரே பரிசோதனைப் பிரிவு மூன்று வாரங்களாக செயலிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles