ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்துக்குள் தம்மீது தீ வைத்துக் கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் மலசலக்கூடத்தில் அவர், தம்மீது தீ வைத்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த பெண் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.