மாத்தறை – பரண தங்கல்ல வீதியில் பயணித்த சைக்கிள் பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பள்ளிமுல்லையில் இருந்து மஹாநாம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் பயணித்த நபர் படுகாயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாத்தறை, வராஹா வீதியைச் சேர்ந்த 85 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய சைக்கிள் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்ய மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.