Sunday, May 25, 2025
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவி

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 600 மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.

அதன் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்றுப் பிற்பகல், கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மருந்து, சுகாதாரத் தேவைகள், சமூகப் பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்குவதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles