பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என இன்று (13) உச்ச நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதேஇ சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் இதனை தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஹரிணி அமரசூரிய ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தில் உள்ள விடயங்கள் இலங்கை அரசியலைப்பின் மனித உரிமை விதிகளை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.