இஸ்ரேலில் உள்ள எந்தவொரு இலங்கையர்களும் இதுவரை நாடு திரும்ப கோரிக்கை விடுக்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள உறவினர் கோரிக்கை விடுத்தால் அவர்களை அழைத்து வர முடியும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் விமானங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போதிலும், விமான நிலையம் இன்னும் மூடப்படவில்லை.
அங்குள்ள இலங்கையர்களை, ஊடகங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கும் தகவல்களை மாத்திரம் நம்பியிருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பத்தில் உதவும் வகையில் இலங்கை அரசாங்கமும்இ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
இதன்படி, இலங்கை அரசாங்கம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 10 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர சந்தர்ப்பங்களில் உதவுவதற்காக ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் அவசர மருத்துவம், உணவு உள்ளிட்ட நலன் கருதி குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.