வீட்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்ற இலங்கையர் ஒருவர், அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளரால் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளார்.
கொத்தடுவ, புதிய நகரில் வசித்து வந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்த அசம்பாவிதத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான், இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
இதனால், சவுதி அரேபிய வைத்தியசாலையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் பொலிஸாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நயனா தில்ருக்ஷி கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி குருணாகலில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் உதவியுடன் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.