ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்துப் பற்றாக்குறை மற்றும் நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் தொடர்பிலும், சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.