Sunday, July 13, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் உள்ள உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்காக விசேட எண்

இஸ்ரேலில் உள்ள உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்காக விசேட எண்

இஸ்ரேலில் நிலவும் மோதல் சூழ்நிலையை அடுத்து, நாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வழங்கியுள்ளது.

அதன்படி, இஸ்ரேலில் உள்ள இலங்கை பணியாளர்கள் பற்றிய தகவல்களை +94716640560 என்ற WhatsApp இலக்கத்துக்கு அல்லது 1989 வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உடனடி தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கமுடியும்.

தற்போதைய சூழ்நிலையில், இஸ்ரேலில் சுமார் எட்டாயிரம் இலங்கையர்கள் பணிபுரிவதுடன், அவர்களில் 90 சதவீதம் பேர் சேவை வழங்குநர்களில் பணிபுரிகின்றனர்.

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து, நாட்டில் உள்ள இலங்கையர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து, நாட்டில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles