Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் 300க்கும் அதிகமான அச்சுறுத்தலான மரங்கள்

கொழும்பில் 300க்கும் அதிகமான அச்சுறுத்தலான மரங்கள்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள 300 இற்கும் அதிகமான மரங்கள் மக்களுக்கும் சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஆராய்ந்து அச்சுறுத்தல்களை உடனடியாக நீக்குவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் நேற்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர பகுதிகளுக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் 300 மரங்கள் மக்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு அச்சுறுத்தலென அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட குழுஇ அச்சுறுத்தலின் அளவை மதிப்பீடு செய்து அறிக்கையை வழங்கும். அதனடிப்படையில் மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றுவது அல்லது மரங்களை முழுமையாக அகற்றுவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles