இலங்கை பெற்ற கடன்களின் மறுசீரமைப்பிற்கு சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கி உடன் ஆரம்பகட்ட உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இது இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது.
அதேநேரம், விரைவான பொருளாதார மீட்சிக்கு வழி வகுக்கும் என்றும் நிதிய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.