Monday, November 18, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகண் நோய்க்கு வைரஸ் காய்ச்சல் தான் காரணமாம்

கண் நோய்க்கு வைரஸ் காய்ச்சல் தான் காரணமாம்

தற்போது சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவரும் கண் நோயானது இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியினால் ஏற்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அவ்வப்போது வைரஸ்கள் வரலாம் எனவும், வைரஸ் காய்ச்சலால் கண் நோய் ஏற்படும் சாத்தியம் உள்ளதுடன், அழுக்கு கைகளால் கண்களைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும், கண் சிவத்தல், கண் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த கண் நோய் வைரஸால் ஏற்படுவதால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையில்லை எனவும், ஐந்து நாட்களுக்கு மேல் இந்நோய் நீடித்தால், சிகிச்சை பெறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles