ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாட்டில் ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான மிக முக்கியமான 3 சட்டங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் அதேநேரம், 10 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.