ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற ஆசனமொன்று வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, அலி சாஹீர் மௌலானா அவருக்கு பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.