Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇஸ்ரேலில் காணாமல் போன இலங்கைப் பெண் இறந்துவிட்டதாக சந்தேகம்

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கைப் பெண் இறந்துவிட்டதாக சந்தேகம்

இஸ்ரேல் – பலஸ்தீன மோதலின் போது நேற்று காணாமல் போனதாக கூறப்படும் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இந்த பெண் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவின் கீழ் வெளிநாடு சென்றுள்ளார்.

கம்பஹாவைச் சேர்ந்த 49 வயதான இவர் இஸ்ரேலுக்கு தாதியாக சென்றுள்ளார்.

இஸ்ரேலின் தற்போதைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க, இராஜதந்திர தலையீட்டின் அடிப்படையில் பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் இருந்து அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து காப்பீடு மற்றும் இழப்பீடு தொகையை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles