Saturday, May 9, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுSTF ஜீப் கோர விபத்து: இருவர் பலி

STF ஜீப் கோர விபத்து: இருவர் பலி

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

மழை பெய்யும் போது பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஜீப், வீதியில் நின்றிருந்த மாடுகள் மீது மோதியதுடன் வீதிக்கு அருகாமையில் இருந்த சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, மதுகந்தவில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் இரு இராணுவத்தினர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த ஏனைய ஆறு பேரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles