பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், நிகழ் நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் மீளப்பெறவேண்டும் என கோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று (9) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது உயிர்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரியும், அனைத்து மனித ஊரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறலை உறுதிபடுத்துமாறும், நிகழ் நிலை காப்புச்சட்டத்தை முன்மொழிவதை மீளப்பெறுமாறும், ஊடக சுதந்திரம் மற்றும் சுயாதீனம் வேண்டும் எனவும், தகவல்களை அறிவதற்கும் கருத்து சுதந்திரத்திரம் அடிப்படை உரிமையாகும் என தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.