Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை

தினேஷ் ஷாப்டரின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ மருத்துவக் குழு உண்மைகளை ஆராய்ந்து, அவரை உடலை தகனம் செய்வதற்கு அனுமதிக்க முடியுமா என்பதை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை இன்று (09) கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் குடும்பத்தின் உரிமைகளுக்காக வாதிட்ட ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, உயிரிழந்தவரின் சடலத்தை தகனம் செய்வதே தமது கட்சிக்காரர்களின் கடைசி விருப்பம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டால், கொழும்பு ஜாவத்தை பொது மயானத்தில் அமைந்துள்ள ‘சர்ச் ஆஃப் இங்கிலாந்து’ பிரிவைச் சேர்ந்த மயானத்தில் இருந்து இறந்தவரின் மனைவி காணி ஒன்றைப் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், கோரிக்கை தொடர்பில் குடும்ப உறுப்பினர்களின் சத்தியக் கடதாசிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உண்மைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.

மேலும் விசாரணைக்கு இறந்தவரின் உடல் தேவையா? அதை தகனம் செய்ய முடியுமா? மரணத்திற்கான காரணத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அசேல மெண்டிஸுக்கு இந்த விடயத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை சுட்டிக்காட்டும் அறிக்கையை சடலம் விடுவிக்கும் வரை சமர்ப்பிக்க முடியாது என ஐவரடங்கிய மருத்துவ குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக நீதவான் மேலும் குறிப்பிட்டார்.

அதன்பின், மீண்டும் வரும் 16ம் திகதி விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles